அன்புள்ளம் கொண்ட நமது இனிய தமிழ் மக்களுக்கு பாரடைஸ் குழுமத்தின் அன்பான வணக்கங்கள் !!!
உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் மற்றும் அனைத்து மொழி மக்களும் ஆரோக்கியமாகவும் , மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சிறப்பாகவும் நலமாகவும் வளமாகவும் வாழ பாரடைஸ் குழுமம் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்தி மகிழ்கிறோம்.
மனித வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் பொறுப்புடனும் பக்தியோடும் வாழ்வதற்கே. நல்ல காற்று நீர், உணவு , உடை, வீடு, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு,தேவையான பொருளாதாரம்,மன அமைதி, எதையும் எதிர்பாராத அன்பு, பொறுமை, நிதானம்,ஆகிய இவைகள் அனைத்தும் மகிழ்ச்சியான , நிம்மதியான வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது அழுத்தத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
ஆன்மீகம், கலை , கலாச்சாரம், பண்பாடு,விஞ்ஞானம், வான சாஸ்திரம், கட்டிடக்கலை, வணிகம், பொருளாதாரம் மற்றும் அனைத்து துறைகளையும் உருவாக்கி மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், சிறப்பாகவும் வாழும் வாழ்வியல் விஷயங்களை உலகிற்கு கற்றுக்கொடுத்த சமூகம் நம் தமிழ் சமூகம்.
சராசரியாக 120 முதல் 130 வருடங்கள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து காலமானவர்கள் நமது தமிழ் சமூக முன்னோர்கள். உலகில் உள்ள அனைத்து மருத்துவத்திற்கும் மூலமும் தாயும் நமது தமிழரின் சித்த வைத்தியமும் இந்திய ஆயுர்வேத வைத்திய முறையும் மட்டுமே.
உலகில் முதன் முதலில் விவசாயம் எனும் வாழ்வியலை உருவாக்கி பல விதமான காய் கறிகள் , தானியங்கள் , பயிர்வகைகள், பழம் தரும் மரங்கள் மற்றும் உணவுக்கு தேவையான பல விஷயங்களை கண்டறிந்து பயிரிட்டு தரமான ஆரோக்கியமான வாழ்வியலை படைத்தவன் தமிழனே ...
அந்நியர்களின் சூழ்ச்சியால் நாம் நமது ஞானத்தையும் சிறப்பான வாழ்வியலையும் தொலைத்து விட்டு பல இயற்கை ஆதாரங்களையும் காவுகொடுத்துவிட்டு போலியான அந்நிய பொருளாதார சூழ்ச்சியில் சிக்கித்தவித்து வருகிறோம். இன்றைய நிலையே இப்படி என்றால் அடுத்து வரும் நம் சந்ததிகளின் நிலை கேள்விக்குறியே.
நாம் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஞான அறிவியல் வாழ்வியலை ஏதோ ஒரு காரணத்திற்காக தொலைத்து தேய்ந்து தொல்லைகளின் எல்லையில் வாழ்ந்து வருகிறோம்.
இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா ?
நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வியலை மீட்டெடுக்க முடியுமா?
பொருளாதாரத்தில் சிறப்பான நிலையை அடைய முடியுமா??
அடுத்த சந்தையினரும் சிறப்பான நலவாழ்வியலை கடைபிடித்து
ஆரோக்கியமாக 100 வயதுக்கு மேல் வாழமுடியுமா?
இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடையும் தீர்வும் இருக்கிறதா ???
தீர்வு இருக்கிறது என்று நம்புங்கள் . நம்பிக்கை தான் வெற்றிக்கு முதல் படி. கண்டிப்பாக தீர்வு இருக்கிறது? ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...
"இயற்கை உணவு, உடை,கல்வி, மருத்துவம், இருப்பிடம், வேலை அல்லது தொழில், வாகன வசதிகள். கலை, கலாச்சரம், பண்பாடு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு போன்ற அனைத்தும் சிறப்பாக பெற்று கவுரவமான
வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஏதுவான சூழ்நிலையை அமைத்துக்கொடுப்பதே பாரடைஸ் குழுமத்தின் முழுமையான நோக்கம்".!!!
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். - திருவள்ளுவர்
நாம் உயிர்வாழ உணவும் நீரும் பஞ்சபூதங்களும் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் ஆரோக்கியமாக வாழ சத்தான சமவிகித உணவு தேவை. இன்றய காலகட்டத்தில் இயற்கை உணவு என்பது ஏழ்மை மற்றும் நடுத்தர குடுமபங்களுக்கு எட்டா கனியாகிவிட்டது. சத்தான சுத்தமான தண்ணீர் என்பது யாருக்குமே எளிதில் கிடைப்பதில்லை என்பதே உண்மை.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள் , சிறுதானியங்கள், பருப்புவகைகள் , பயிர்வகைகள் மற்றும் அணைத்து இயற்கை உணவு தேவைகளுக்கும் இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்து, இயற்கை விவசாயிகளிடம் மொத்தமாக
கொள்முதல் செய்து, புதிய இயற்கை விவசாயிகளை உருவாக்கி ஊக்குவித்து , நம் மக்களின் சத்தான உணவு தேவைகளை பூர்த்தி செய்து ஆரோக்கியமாக வாழவைப்பதை தலையாய கடமையாக உறுதி கொண்டுள்ளது நமது பாரடைஸ் குழுமம்.
கூட்டு முயற்சியால் தான் மிக பெரிய வெற்றியை பெற முடியும் என்பதால் நம் முதலீட்டாளர்களும் , இயற்கை விவசாயிகளும், பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு இயற்கை விவசாயியாகவும் மற்றும் முதலீட்டாராகவும் சேர்ந்து பயன்பெறலாம்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 2500 கடைகள் துவங்க இருக்கிறோம். இந்த கடைகளில் அணைத்து விதமான பழங்கள் காய்கறிகள் மற்றும் அனைத்து விதமான இயற்கை உணவுகளும் கிடைக்கும். இந்த கடைகள்அனைத்தும் பிரான்சைஸ் முறையில் இயங்கும்.
முதலீடு வாய்ப்பு
இதில் முதலீடு செய்து பிரான்சைஸ் எடுக்க விரும்பும் அனைவரும் தங்கள் விபரங்களை பதிவு செய்து நமது அலுவலகத்தில் சந்திக்கும் நேரம் அல்லது தொடர்புகொள்ள நேரம் பெற்று முதலீட்டார்கள் என்ற அந்தஸ்தை பெற்று பயன் பெறலாம். முதலீடு செய்த மாதம் முதலே தங்களுக்கு மாத வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். மேலும் விபரங்கள் அறிய
நமது பாரடைஸ் குரூப்பில் வேலை செய்ய தகுந்த நபர்களை எடுத்து பயிற்சி கொடுத்து நல்ல சம்பளம் உணவு உடைகள் தங்குமிடம் போன்ற அணைத்து வசதிகளும் செய்து கொடுத்து நல்ல சம்பளத்தில் பல விதமான பணிகளில் அமர்த்த இருக்கிறோம்.பயிற்சியில் கலந்து கொண்டு வேளையில் சேர விரும்பும் படித்த இளைஞர்கள் பெரியவர்கள் பெண்கள் அனைவரும் இங்கு பதிவு செய்து கொள்ளலாம்.
நமது நாட்டில் பல விதமான உடை கலாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் உடை கலாச்சாரத்தில் வேறுபடுகிறது. பருத்தி நூலால் ஆன உடையே மனித குலத்துக்கு சிறந்தது என்று நமது முன்னோர்களும் அறிவியலாளர்களும் கூறி வருகின்றனர். ஆனால் நாம் அந்நிய கலாச்சர மோகத்தால் பருத்தி அல்லாத பலவிதமான செயற்கை நூல் இலைகளால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்து வருகிறோம். இதன் காரணமாக நமக்கு பலவிதமான தோல் நோய்கள் மற்றும் சங்கடங்களை அனுபவித்தும் வருகிறோம்.
வாழை நாறுகளிலும் நாம் நூல் இலை எடுத்து ஆடைகைளை உருவாக்க முடியும். அதுவும் நம் உடலுக்கு உகந்ததே. இந்த நூல் இலை ஆராய்ச்சியில் பாரடைஸ் குழுமம் முழுமையாக ஆராய்ச்சி செய்து வருகிறது.
நல்ல உடைகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் தன்னம்பிக்கையையும் மிடுக்கான தோற்றத்தையும் பிரதிபலிக்கிறது,பிறந்த குழந்தை முதல் எல்லா வயதினருக்குமான அனைத்து பாலினத்தினருக்கும் தேவையான அரோக்கியம் காக்கும் சிறந்த உடைகளை நம் தேகநலனுக்கு உகந்ததாகவும் மற்றும் அழகிய வடிவமைப்பில் பல நிறுவனங்களிடம் இருந்து உருவாக்கி எல்லா ஊர்களிலும் நமது பாரடைஸ் குழுமம் கடைகள் மூலம் நமது முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும் கிடைக்க ஆவன செய்வோம். இந்த தொழிலிலும் பிரான்சைஸ் முதலீட்டாளர்களாக விருப்பமுள்ளவர்கள் பங்கு பெறலாம். முதலீடு செய்த முதல் மாதத்தில் இருந்தே நல்ல வருமானம் மற்றும் காலம் முழுவதும் நல்ல லாபம் ஈட்டலாம்.
ஆபரணங்கள்
அனைத்து விதமான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அழகிய வடிவமைப்பில் எண்ணில் அடங்கா டிசைன்கள் நமது ஆடையகத்தில் ஒரு பகுதியாக எல்லா ஊர்களிலும் கிடைக்க ஆவண செய்வோம். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டுகிறோம். இந்த ஆபரண தயாரிப்பு மற்றும் வியாபாரத்திலும், தொழிலிலும் முதலீட்டாளர்களாக விருப்பமுள்ளவர்கள் பங்கு பெறலாம். முதலீடு செய்த முதல் மாதத்தில் இருந்தே நல்ல வருமானம் மற்றும் காலம் முழுவதும் நல்ல லாபம் ஈட்டலாம். மேலும் விபரங்கள் அறிய….. இந்த படிவம் மூலம் தொடர்பு கொள்ளவும்
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. - திருவள்ளுவர்
என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க, அழிவில்லாத கல்விச்செல்வத்தை தரமான முறையில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும்.
குருகுல கல்வி முறை முதல் இன்றைய தொழிநுட்ப தேவை வரை உள்ள அனைத்தையும் எடுத்து இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அணைத்து வாழ்வியல் கல்வி முறைகளை சரியான விகிதத்தில் ஆர்வமாக கற்கும் அளவில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் வரை தேவையான அணைத்து விஷயங்களையும் கற்று தர கடின முயற்சி எடுத்து வருகிறோம். எல்லா ஊர்களுக்கும் எளிதாக கிடைக்க ஆவண செய்வோம். சகல வித்தைகளும் கற்றுக்கொள்ளும் ஒப்பில்லா கல்விகூடமாக நமது பள்ளிகள் அமையும்.
கல்விச்சேவையில் பணிபுரிய மற்றும் சேவைகள் செய்ய மற்றும் முதலீடுகள் செய்ய சேவை மனப்பான்மை உள்ள நல்ல உள்ளங்கள் உள்ளவர்கள் கலந்துகொண்டு பணியாகவோ சேவையாகவோ செய்ய அன்புடன் அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு தங்கள் விபரங்களை அனுப்பவும்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். - திருக்குறள்
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று வேண்டியது இல்லை...
மருத்துவ உலகின் அனைத்து வித மருத்துவத்திற்கும் தமிழர்கள் உருவாக்கிய சித்த மருத்துவமே தாய் என்று சொல்வதில் தமிழராக நாம் பெருமை கொள்வோம்.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உணவே மருந்து ,மருந்தே உணவு என்ற தாரக மந்திரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை உருவாக்கி மக்களை ஆரோக்கியமாக வாழவைக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடும் நோக்கத்தோடும் பாரடைஸ் குழுமம் செயல்பட்டு வருகிறது.
நோய் வராமல் தடுக்கவும், வந்த நோயை முறையாக தீர்க்கவும் அனைத்து விதமான நல்மருத்துவ முறைகளையும் ஒன்று சேர்த்து மக்களின் ஆரோக்கியத்தை மேலோங்க வைத்து உடலும் மனமும் செம்மையாக்க, மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு பாரடைஸ் குழுமம் தீவிரமாக செயல்பட இருக்கிறது. இதற்கென ஒரு குழு அமைத்து மிகப்பெரிய ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் இருப்பது வருடங்களில் இந்தியாவில் உள்ள அணைத்து கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நமது விழிப்புணர்வு மையமும் நோய் தீர்க்கும் மருத்துவமனைகளும் செயல்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.நோயற்டற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். வருமுன் காப்பதே சாலச்சிறந்தது.
THERE IS A SAYING - "DON'T MAKE MONEY IN SICK ROOMS " "நோயாளிகளின் அறியாமையை வைத்து பணம் செய்ய எண்ணாதே"!!!
மருத்துவம் என்பது ஒரு சிறந்த சேவை. வருமுன் காப்பதே சிறந்த மருத்துவரின் கடமை. இந்தியா முழுவதும் நமது சேவைகள் செயல்பட நல்ல உள்ளங்கள் , மருத்துவர்கள் , மற்றும் அணைத்து விதமான மருத்துவ ஆலோசகர்கள் நம்மோடு இணைத்துக்கொள்ள
ஓவ்வொரு மனிதனுக்கும் குடும்பத்திற்கும் வசிப்பிடம் இருப்பிடம் இல்லம் அல்லது வீடு என்பது முக்கிய தேவையான ஒன்று. இந்தியாவில் உத்தேசமாக 50% சதவீத மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
நமது அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு கட்டிக்கொள்ள பல வித திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகிறது.
நமது முதலீட்டார்கள் அனைவரையும் ஒன்றிணைத்து உயர் தொழில்நுட்ப கட்டமைப்பில் சகல வசதியுடன் கூடிய கிராமங்களை உருவாக்க இருக்கிறோம்.
வசிப்பிடம் மற்றும் நம் வசிக்கும் சுற்றுச்சூழல் பொறுத்தே நமது ஆரோக்கியமும் மனநிலையும் வாழ்வியலும் அமைய பெறுகிறது. இயற்கை வளமிக்க சகல வசதிகளும் நம்மை சுற்றி அமைத்து தூய்மையான காற்று , நீர் , நிலப்பகுதி
மரங்கள் மற்றும் செடி கொடிகள், இயற்கை உணவுகள், பாதுகாப்பாக எந்த நேரம் நினைத்தாலும் இயற்கை சூழலில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற சகல வசதிகளும் கொண்ட இடமே எல்லோருக்கும் பிடிக்கும். மிக பிரம்மாண்டமாக எளிய இயற்கை வாழ்வியல் முறையை பின்பற்ற ஏதுவான கிராமங்களை பல இடங்களில் உருவாக்க உள்ளோம்.
முதலீட்டாளர்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்ட வடிவை முதலீட்டாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் விவரிக்கப்படும்.
வாழ்க்கையில் நல்ல சுகாதாரமான இயற்கை சூழ்நிலையில் சகல வசதிகளுடனும் பாதுகாப்பான சூழலில் தங்களுக்கு வீடு வேண்டும் என்ற எண்ணமும் கனவும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள முதலீட்டை நம்மோடு சேர்ந்து பெருக்கிக்கொண்டு அருமையான சூழலில் வாழ்நாள் முழுவதும் இன்பமாய் நிம்மதியாய் வாழ ஒரு அருமையான இல்லத்தை அமைத்துக்கொள்ளலாம்... மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் வேலை , தொழில் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கு வாகனங்கள் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. வாகன தேவைகளை மூன்று விதமாக பிரித்து கொள்ளலாம்.
தினசரி தேவைகளுக்கு சொந்தமான வாகனம் கட்டாய தேவை. அதற்கென தேவையான முதலீடை செய்து பராமரிப்பு செலவையும் ஏற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எப்போதாவது குடுமபத்தோடு பயணிக்க மகிழுந்து போன்ற வாகனங்கள் அல்லது அதிக நபர்கள் செல்லும் அளவிற்கு தேவையான வாகனங்களை அதிக விலை கொடுத்து வாங்கி தினசரி பயன்பாட்டில் இல்லாத போது அது அடிக்கடி பழுதாக நேரிடும். அதோடல்லாமல் ஒரு பெரிய முதலீட்டை செய்ய வேண்டியுள்ளது, அது நம் பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும், எனவே பாரடைஸ் குழுமம் முதலீட்டாளர்கள் பயன் கருதி ஒன்றுபட்ட முதலீட்டாளர்களின் சிறிய முதலீட்டில் பலவிதமான வாகனங்களை வாங்கி ஒவ்வொருவரது குடும்ப தேவையின் போது பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பாரடைஸ் குழுமம் ஏற்பாடு செய்து தருகிறது.
அதுபோல் பல நண்பர்கள் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சுற்றுலா செல்ல நமது சௌகரியத்திற்கு சுற்றி வர பாரடைஸ் குழுமம் பல விதமான பாதுகாப்புடன் கூடிய வசதிகளை செய்து தரும்.
குடும்பத்தோடு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் சுற்றுலா சென்று வரவும் தகுந்த பாதுகாப்புடன் கூடிய ஏற்பாடுகளை செய்து தருகிறோம். இந்த வசதி வீடு கட்டும் திட்டத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு மட்டுமே வழங்க இருக்கிறோம் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்...
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வியல் தேவைகளுக்கு வேலை அல்லது தொழில் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
நமது பாரடைஸ் குழுமம் நமது பலதரப்பட்ட உற்பத்தி தொழில் மற்றும் பிரான்சைஸ் தொழில் மூலமாக பலருக்கும் வேலைவாய்ப்பையும் தொழில் முனைவோருக்கு பல விதமான தொழிலையும் அமைத்து தர இருக்கிறோம்.
அதோடல்லாமல் வேலை வாய்ப்பில்லாமல் சிரமப்படும் படித்த இளைஞர்களுக்கு பல விதமான தேவையான பயிற்சிகள் கொடுத்து நமது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அல்லது இந்தியா மற்றுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தரமான நிறுவனங்களில் வேலை வைய்ப்பை அமைத்து தருவோம்.
மனித குலத்தின் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஆரோக்கியமுமே பாரடைஸ் குழுமத்தின் எண்ணம். வேலை மற்றும் தோழில் செய்ய விரும்பும் தங்கள் விபரங்களை பதிவு செய்து நேரம் பெற்று நேரில் சந்தித்தோ அல்லது அலுவலகத்தில் பேசி பயன்பெற வேண்டுகிறோம்
நமது நாட்டின் கலை கலாச்சரம் பண்பாடு போன்று உலகில் எந்த நாட்டிலும் இவ்வளவு சிறப்பாக இல்லை. அதே நேரத்தில் நம் முன்னோர்கள் உருவாக்கி வளர்த்து போற்றிய கலை கலாச்சாரம் இன்று மிகவும் நலிவடைந்து வருகிறது.
நாம் கடந்த 100 வருடங்களில் பல நல்ல விஷயங்களை தொலைத்து மேலை நட்டு கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறோம். இது நம் தேசத்திற்கு நல்லதல்ல.
எனவே நம் முன்னோர் உருவாகிக்கி வளர்த்து போற்றி வாழ்ந்த கலைகளையும்.கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுப்போம்...
தமிழக மக்கள் அனைவரும் பாரடைஸ் குழுமத்தோடும், வாழ்வியல் அறம்செய் அறக்கட்டளையோடும் சேர்ந்து பயணித்து வளம்பெற அன்போடு வேண்டுகிறோம்.
விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு மட்டுமே என்று மக்கள் விலகிவிட்டார்ககள். விலகிய மக்களை பார்த்து இப்போது குழந்தைகளும் விளக்கொண்டே வருகிறார்கள்.
இது ஆரோக்கியமான போக்கல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளையாட்டும் நல்ல பொழுதுபோக்கு விஷயங்களும் மனதையும் உடலையும் வலுப்படுத்த வல்லது.
நூறு வயது வரை வாழவேண்டும் என்றால் விளையாட்டும் நல்ல பொழுது போக்கு விஷயங்களும் இன்றியமையாதது...
நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் அனைத்தையும் மீட்டெடுத்து மக்களுக்கு கற்றுக்கொடுத்து ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வழி செய்வோம்.
பாரம்பரிய விளையாட்டு பயிற்சியாளர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்து எங்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
மனிதன் மரணிக்காமல் காலமாகி வாழவே நம் சித்தர்களும் முன்னோர்களும் ஆன்மீகத்தை அருளினார்கள்.
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு - வள்ளுவர் வாக்கு
ஆன்மீகம் என்பது கற்று அறிந்து புரிந்து வாழ்தல். நான் என்ற அகந்தையை அழித்து நாம் என்ற பரந்த எண்ணங்களோடு பேராசை தவிர்த்து ஒற்றுமையாய் வாழ்வதற்கே ஆன்மீக வழிமுறைகளை வகுத்தார்கள் நம் முன்னோர்கள்.
அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் மூச்சை செரிமானத்தை உறுப்புகள் இயக்கத்தை இறைவனே இயக்குகிறார் என்ற உண்மையை அறிதலே ஆன்மிகம். அவனின்றி அணுவும் அசையாது என்றார்கள்.. உண்மைதான்.
2000 வருடங்களுக்கு முன்பே உலகிற்கு பொதுமறையை தந்த நமது தமிழ் ஆசான் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை முதலில் படைத்தார். உலகம் போற்றும் நூலாக பழ மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டு உலக மக்களிடம் வளம் வந்து கொண்டுள்ளது. உலகில் வேறு எந்த ஒரு மொழியிலும் அணைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் கருத்து உள்ள ஒரு படைப்பு இல்லை.
தமிழர்களாகிய நாம் ஆன்மீகத்தை கற்று அறிந்து புரிந்து போற்றி நம் வாழ்வியலோடு ஒன்று கலந்து வாழ வேண்டும்.இதுவே நமக்கு பெருமை.
பாரடைஸ் குழுமமும் வாழ்வியல் அறம்செய் அறக்கட்டளையும் இணைந்து நமது தமிழ் பாரம்பரிய தெய்வங்கள், சித்தர்கள் போன்ற அனைத்தும் அடுத்த சந்ததிக்கு ஒரே இடத்தில் பார்க்க அறிய புரிய கற்றுக்கொள்ள ஒரு
பிரம்மாண்டமான கற்கோவில் அமைக்க உள்ளோம். உலக தமிழ் மக்கள் அனைவரும் இந்த வேள்வியில் கலந்துகொள்ள அன்போடு வரவேற்கிறோம்.
மக்களின் பொருளாதாரரா உயர்வுக்காக பல விதமான திட்டங்களை வகுத்து வருகிறது பாரடைஸ் குழுமம்.
மனித வாழ்வியலில் பொருளாதாரம் என்பது வாழும்போது தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நாம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் சமூகத்தில் வாழ்வதற்கும் தான்.
"தேவை இல்லாத ஒரு பொருளை வாங்கினால் தேவையான இரண்டு பொருளை விற்க நேரிடும்" என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழி.
நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எது தேவை எது தேவை இல்லை என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். எது அத்தியாவசிய தேவையோ அதை நாம் முறையாக பொருளாதார நிலையை யோசித்து அதன்படி வாங்கி பயன்பெற வேண்டும். பிறர் நம்மை கவுரவமாக நினைப்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எப்போதும் எந்த பொருளையும் வாங்க கூடாது. அப்படி வாங்கினால் தான் நாம் பொருளாதாரம் சீர்கெட்டு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இழக்க நேரிடும்.
நாம் சம்பாதிக்கும் பணத்தில் சேமிப்பது ஒரு வழக்கம் என்றால் , நம் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த செல்வதை அழிக்காமல் பாதுகாப்பதும் ஒரு சிறந்த சேமிப்பே. சிறிய அளவில் நாம் சேமித்த பணத்தை ஒவ்வொரு முறையும் அதை சரியான விதத்திலும் விகிதத்திலும் முதலீடு செய்து அதன் மூலம் செல்வத்தையும் பொருளாதாரத்தையும் பெருக்கி வளர வேண்டும்.
இன்றைய சூழலில் நிலம், தங்கம் , நிறுவனங்களின் பங்குகள்,நல்ல லாபம் தரும் தொழில், கிரிப்டோ கரன்சி ,வெள்ளி, சட்டபூர்வமான லாபம் தரும் முதலீடுகள் மற்றும் ஆயுள் காப்பீடு போன்ற விஷயங்கள் முறையாக முதலீடு செய்து வளர்ச்சி பெறுவதே நிம்மதியை தரும். மொத்தத்தில் சட்டபூர்வமான முதலீடுகளாக இருந்தால் மட்டுமே நாம் அதில் முதலீடு செய்ய வேண்டும்.
முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பல விதமான சேமிப்பு மற்றும் தொழில் முதலீடு மற்றும் பல விதமான சட்டபூர்வமான விஷயங்களில் முதலீடு செய்ய அணைத்து ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்ய எப்போதும் பாரடைஸ் குழுமம் அன்போடு செயல்படும். எங்களின் மேலான சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.